Friday 21 August 2009

அரசன் அடிமையானான்

வெற்றிலை போட்ட வானத்தைப்பார்த்தேன்....
உன் கண்ணங்கள் சிவந்ததை அறிந்தேன்...

நீல வானில் நிலவைப்பார்த்தேன்...
நிலவின் ஒளியை குடித்த உன் முகத்தை அறிந்தேன்...

மழையூட்டும் மண்ணின் வாசத்தை சுவாசித்தேன்....
உன் கூந்தலின் இயற்கை நறுமணம் அறிந்தேன்...

சில்லென்ற காற்று எனை அண்டக்கண்டேன்
உன் கைகளை வருடிய அந்நிலை அறிந்தேன்...

பஞ்சுமிட்டாய் என் நாக்கில் கரைய
உன் உதடுகளில் கரைந்த இனிப்பினை அறிந்தேன்...

எனக்குள் அடிமையாக வந்து
என்னை அரசாலு என்அன்பே....

உனக்குள் அரசனாக வந்து
என்னை உனக்கு அடிமை ஆக்கிவிட்டேன் என்றோ...

ஈழம்


ஈழத்து மண்ணிலே தான் வாழ்வேன் என்றவரெல்லாம்
ஈழத்துடனே சென்றுவிட்டனர்போலும்
தவறிய தாயகம் என்பதா
தவத்திய தாயகம் என்பதா…


ஈழத்து சிறுவர்கள் எல்லாம் எங்கே சென்றுவிட்டனர்
ஈழத்து பிணக்குழியில் பள்ளிப்பைகளுடன் உக்கியபடி…
தவறிய தாயகம் என்பதா
தவத்திய தாயகம் என்பதா…


ஈழத்து இளைஞரெள்ளாம் இங்கணம் கானோமே
ஈழத்து முகாமில் பணயக்கைதிகளாய்
தவறிய தாயகம் என்பதா
தவத்திய தாயகம் என்பதா…


தவறிய எம் தாயகத்தை எதைக்கொடுத்து மீட்பேன்…

Monday 17 August 2009

ஆசை

சூரியன் விடைபெறும் அந்நேரம்
அலைகள் கை தட்டி வழி அனுப்ப...
உன் கைகளை வருடிய படி என கைகள்

சூரியன் விடைபெறும் அந்நேரம்
ஆகாயம் நாணத்தில் சிவந்திட...
கன்னங்களை பழுக்க விட்டபடி உன் அருகில் என் நாணம்

சூரியன் விடைபெறும் அந்நேரம்
குரும்புத்தனத்துடன் நிலா காத்திருக்க...
சில்மிசம் செய்யும் உன் கண்கள்

சூரியன் விடைபெறும் அந்நேரம்
கரையை வருடிய நண்டுகளுடன்
போட்டியிட கரைதேடிய என் கால்கள்

சூரியன் விடைபெறும் அந்நேரம்
நீருக்குள் மூல்கிடும் தாமரை போல
உன் நெஞ்சினில் உதைந்திடும் என் முகம்....

உன் இதயம்

உன் கைகளை கட்டினேன் தீண்டாதே என
உன் கண்களால் என்னை கைப்பற்றினாய்
உன் கண்களை இருக்க மூடினேன் பாக்காதே என
என் சுவாசத்தை உள்விட்டு உன்னுள் செலுத்தினாய்
உன் இதயத்தை எட்டி
என் இதயத்தை மீட்டெடுத்தேன்
உன் இதயத்துடிப்பை அறவே நிருத்திவிட்டாய்...
என் செய்வேன் நான் இனி...

Friday 14 August 2009

காதல்

வார்த்தைகள் மவுனமாக
இதயங்கள் மலர்ந்தன
இதயங்கள் துடிக்க மறக்க
கண்ணகள் மலர்ந்தன
கண்ணகள் இமைக்க மறக்க
வார்த்தைகள் மலர்ந்தன