Tuesday 25 December 2007

இதுதான் காரணமா?

காதல் தோல்விகளை மட்டுமே
கவிதைகளாக தீட்டி வந்தேன்.......
அதுதானோ இன்று......
என் காதல் தொல்விகண்டுவிட்டது.....

கலந்துவிட்டாயடா...

ஓர் பார்வையிலேயே கண்களுடன் கலந்துவிட்டாய்...
என் நினைவாக நெஞ்சோடு கலந்துவிட்டாய்...
உன் முத்தத்தில் என் உயிரோடு கலந்துவிட்டாய்...

Friday 23 November 2007

முடியவில்லை

பெற்றெடுக்கையில் வலிக்கவில்லை
உன்னை தொட்டெடுக்கையிலும் வலிக்கவில்லை

பாலூட்டையிலும் வலிக்கவில்லை
உன்னை பாராட்டையிலும் வலிக்கவில்லை

சீராட்டையிலும் வலிக்கவில்லை
உன்னை சிரசில் ஆட்டையிலும் வலிக்கவில்லை
மார்பினில் ஆட்டையிலும் வலிக்கவில்லை

ஆனால்...... இன்று வலிக்கிறது
காரணம் உன் சொற்களின் வலிமை

தாங்கமுடியவில்லை நிறுத்திவிடு அதை
இல்லை கொன்று விடு என்னை......

Thursday 15 November 2007

ஓ(கா)வியம்

ஓவியம் வரைந்த என்னை
காவியம் வரைய வைத்த காதலியே!!
உன் திரைச்சீலை கலைத்து வா முன்னே
அல்லது என் பிணவோலை
தேடி வரும் உன் முன்னே!!!!

Sunday 11 November 2007

படைப்பு

உனை வடித்த பிரம்மன் இம்மண்ணில்
எனை வடித்ததேனோ கன்னி உன்னைக்கண்டு
இம்மண்ணில் நான் மடிந்திடத்தானோ......

Monday 5 November 2007

நண்பனே!!!!!!!!!

எங்கோ பிறந்து.... எங்கோ வளர்ந்த.... நீ
இன்று... எனக்காக உருகுகின்றாய்....
எனக்காக சிந்திக்கின்றாய்....
எனக்காக சுரக்கின்றாய் உன் கண்ணீரை.....

நண்பனே....
உனக்காக நானும் உருகுவேன்
உனக்காக சிந்திப்பேன்...
ஆனால் நண்பா உனக்காக சுரக்க மட்டும் என் கண்ணில்
கண்ணீர் இல்லையடா... எனெனில்
நமக்கெனத்தான் நான் அழுதுமுடித்துவிட்டேனே...

நண்பனே நீ..
தோல் கொடுக்கையில் என் நண்பனாகினாய்....
மடி கொடுக்கையில் என் தாயாகினாய்....
அறிவுரைகளில் என் தந்தையாகினாய்.....
அரவணைப்பில் என் மழலையாகினாய்.....
கரம் கொடுத்து நீ உயர்த்திவிட்டாய்

உன் கரங்களை ஒருபோதும் நான் விடமாட்டேன்
ஏனினில் அது உதவிக்கரம்மட்டுமல்ல...
என்னை வழி நடத்தும் கரங்கள்...

நண்பனே.....
உன் கரங்களுக்கு கோடி முத்தங்கள்..
தயவு செய்து நீ ஒருபோதும் உன் கரங்களை உதறிவிடாதே....
தோள்கொடுத்த உன் நட்பிற்கு நன்றிகள் கோடி
நட்பே உன் கற்பை நான் என்றும் அழியாது காப்பேன்....

Tuesday 30 October 2007

ஒரு தலைக்காதல்

அன்பே என்றேன் காதலுடன்
அன்பே என்றாய் ஆசையுடன்
எனை என நினைத்தேன்
திசை என் நண்பனன நோக்கியதை
இன்று தான் அறிந்தேன்.....

Monday 29 October 2007

உண்மை

நிலவே நீ இம்மக்களை சுழல்கின்றாய்
இவர்களோ பிறரை சுழற்றுகின்றார்கள்
உன் உடலில் சிறுகிடங்குகள்
இவர்கள் மனதில் புதைகிடங்குகள்

அருகில் நீ கறுப்பு
இவர்கள் மனதே கறுப்பு
நீ தருவது நிலாவெளிச்சம்
இவர்கள் தருவது வெடிவெளிச்சம்

உனக்கு உரித்து அழகு
இவர்க்கு உரித்து அழிவு

Tuesday 23 October 2007

(ம)(மா)து

மாது உனை நினைத்து நான் மது அருந்தி
உயிர் துறக்க இருப்பது தெரிந்தும்
அவன் பணமதை நினைத்து நீ
குளிர்பானம் தனை அருந்தி மகிழ்கிறாய்.....

பணம்

நான் கேட்டதோ உந்தன் மனப்பெட்டி
உனக்கு வேண்டியதோ எந்தன்
பணப்பெட்டி
நீ எனக்கு தந்ததோ ஓர் சவப்பெட்டி.....

Monday 22 October 2007

முதலும் முடிவும்

இறைவன் என்னைப்படைத்த அக்கணமே
உன்னைப்படைத்ததன் காரணம் நாமிருவரும் மணக்கத்தான்
என நினைத்திருந்தேன்
நீயோ என் தமைய்னை மணந்துவிட்டாய்

இடிந்தது என் மனம்
முடிந்தது உன் மணம்

சிதைந்தது என் வாழ்வு
சிறக்கட்டும் உன் வாழ்வு

Tuesday 9 October 2007

அன்றும் இன்றும்

அன்று!!!

உனக்கு வெள்ளி எனக்கோ வில்லி
உனக்கு விடுதலை எனக்கோ அறுதலை

மறுநாள்
காலை!!!!

நீ தூக்கிக்கட்டுவாய் தாலி
நான் தூக்கை கட்டுவேன் நாடி - அவள்
ஊட்டி விடுவாள் பால் உனக்கு - சிலர்
ஊற்றி விடுவார் பால் எனக்கு

மாலை!!!

உன் வீட்டுஜோதிக்கு ஏற்றுவாள் அவள் தீபம்
என் சோதிக்கும் ஏற்றுவார் சிலர் தீ

இன்று!!!!

படித்து முடிப்பாய் - என் இவ் வரலாற்றை
பார்த்து ரசிப்பேன் நான் இங்கு
இங்கு என்பது
சொர்க்கமா????
நரகமா???
அவன் கையில்
சென்றுவருகிறேன் என் உயிர் நண்பா!!!
என்றும் உன்..................

Friday 5 October 2007

மகிழமறுத்ததேனோ????

அழகிய சோலையிலே உன்
சேலைகண்டு மகிழ்ந்தேன்

அழகிய என் மாளிகையில் நீ
என்னைக்கண்டு மகிழ்ந்தாய்

இன்றும்......

நான் உன்னை தீவினிலும்
கண்டு மகிழ்கிறேன்

ஆனால்.....

நீ குடிசையில் என்னைக்கண்டு
வெறுப்பதேனோ???

Saturday 29 September 2007

துடிக்கின்றேன்

என் மனதைப்புதைத்த
உன் அழகை
மறைக்கத்துடிக்கின்றேன்
ஜயத்தால் அல்ல வேறு
மனதை புதைக்காமல்
இருப்பதற்கு

Wednesday 26 September 2007

சாமாதானம்

கல்லெடுத்து சிலைவடித்த கலைஞனும்
சொல்லெடுத்து கவிகொடுத்த கவிஞனும்
உருவாக்கிய சமாதானம்
இன்று............
ஜடப்பொருளாய் உள்ளது
மீண்டும் உயிர் கொடிக்க வேண்டும்
உதவிக்கரம் தருவீர்களா மனிதர்களே?

Tuesday 25 September 2007

சொல்லடி என் காதலி?

உனை பார்க்க சூரியன் வரும்முன்னே
நான் ஓடிவந்தேன் சூரியனிடம் போட்டியிட அல்ல
உன்னிடம் காதல் பிச்சை கேட்க
ஆனால்..................
என்னைத்தேடி காலன் வரும்முன்னே
நீ ஓடிவரவில்லை ஏன்
பணம் என்னைவிட்டு ஓடிவிட்டதென்றா?
சொல்லடி என் காதலி?????

Sunday 23 September 2007

பிச்சை

உனக்கும் எனக்கும் உள்ளதோ ஓர் வேறுபாடு
நீ பணப்பிச்சை கேட்கின்றாய்
நான் காதல் பிச்சை கேட்கின்றேன்!!!!!!!!!

Saturday 22 September 2007

அ(வி)ஞ்ஞானி

விஞ்ஞானம் சொன்னதடி
ஓருயிர்க்கு என ஓர் இதயம்
அஞ்ஞானி சொல்கின்கேன்றேன்
உள்ளதடி என்னிடம் ஈரிதயம்
ஒன்று எனது மற்றயது உனது
முடியவில்லை பெற்றுவிடு எனதை
காத்திடுவேன் உனதை
அன்பே......
முடிவு செய் என் மனதா
இல்லை......
என் உயிரா???????

பிடித்ததை எடு நடிப்பதை விடு.......

Sunday 16 September 2007

சரியா.... தவறா.......

பெண் மேல் காதல் கொண்டால் சரியா தவறா - இல்லை
பொன் மேல் காதல் கொண்டால் சரியா தவறா

பிறப்பினில் ஆசை கொண்டால் சரியா தவறா - இல்லை
இறப்பினில் ஆசை கொண்டால் சரியா தவறா

மண்ணில் பற்று கொண்டால் சரியா தவறா - இல்லல
விண்ணில் பற்று கொண்டால் சரியா தவறா

பொய் தனை கைக்கொண்டால் சரியா தவறா - இல்லை
மெய் தனை கைக்கொண்டால் சரியா தவறா

பெண்ணென மகிழ்ந்து கொண்டால் சரியா தவறா - இல்லை
பெண்ணென நெகிழ்ந்து கொண்டால் சரியா தவறா

வாழ்வை என்னி என்னுள் அழுது கொண்டால் சரியா தவறா - இல்லை
சாவை என்னி என்னுள் சிரித்துக்கொண்டால் சரியா தவறா

நான் உன்னை மணந்து கொண்டால் சரியா தவறா - இல்லை
நான் என்னை மடித்துக் கொண்டால் சரியா தவறா

அன்பே!!!!!!!!

உன்மேல் காதல் கொண்டால் சரியா தவறா - இல்லை
மண்மேல் காதல்கொண்டால் சரியா தவறா

தவறு என்றால் தவித்திடும் என் ஜீவன்
அன்பே!!! நீ செய்வது சரியா? தவறா?

Friday 14 September 2007

நன்கு அறிவேன்

காதல் கதைகளை வாசிக்கும் - நீ ஏன் என்
காதல் கடித்த்தை தொட மறுக்கின்றாய்

சோடிகளை சேர்க்கும் - நீ ஏன் என்
சோடியாக மறுக்கின்றாய்

பாசங்களை வளர்க்கும் - நீ ஏன் என்
பாசத்தையே மறுக்கின்றாய்

மறுத்த காரணம் நான் அறியேன்
ஆனால்!!!!!! மறுத்தவளே.......

உனை நான் நன்கு அறிவேன்......

தயக்கம்

கடிதத்தில் காதல் சொல்லிய என்னால்
உன் முன் வரத்தயக்கம் காரணம்
வெட்கமல்ல பயம்
ஆமாம்........
எங்கே எனைப்பார்த்து
வெறுத்து விடுவாய் என்றல்ல
நீ சம்மதம் சொல்லாவிட்டால்.............

Monday 10 September 2007

பே(போ)தை

போதையிலும் தன் நிலை மறவா
ஆடவன்
பேதையினால் தன் பாதை
மறந்தான்

மாமிமார்கள்

வீட்டுக்கு விளக்கேற்ற
மகாலஷ்மி வந்தாச்சு என்பார்கள்
எங்களுக்குத்தான் தெரியும் சோற்றுக்கு
அடுப்பேற்றப்போகிறவர் நாங்களென்று
எங்களை மட்டுமா மாட்டைக்கூடத்தான் மகாலக்ஷ்மி
என்கின்றார்கள்
கறக்கத்தான் நினைக்கிறார்கள் பாவம்
மன்னித்துவிடுங்கள் அவர்கள் மாமிமார்கள்.......

Friday 7 September 2007

என் வாழ்வில்!!!!!!!!!!!

இன்பம் கிடைக்குமா என் வாழ்வில்
அன்பும் கிடைக்குமா என் வாழ்வில்
துன்மம் வேண்டுமா என் வாழ்வில்
நண்பன் வேண்டுமா என் வாழ்வில்

இன்பம் உள்ளதோ என் வாழ்வில்
அன்பும் உள்ளதோ என் வாழ்வில்
அன்பு உள்ளதா இவ்வுலகில்
கிடைக்குமா எனக்கு பங்கதனில்........

Wednesday 5 September 2007

உறவு

அன்பே!!!!!

எம் உறவின் அர்த்தம் புரியாது
தவித்தபோது
அது மூன்றெழுத்தென்றாய்
காதலென எண்ணி நான் காதல் தீ
வளர்த்தேன்

ஆனால்!!!!!!!!

பாவி நீயோ
நட்பு எனும் கங்கையால்
அதை அணைக்கச்சொல்கின்றாய்

என் செய்வேன் என் சகியே!!!!!

காதல் பரீட்சை

காதல் பரீட்சை செய்ய உன்னிடம் வந்தேன்
காலன் தேடி என்னிடம் வந்தான்
நான் பரீட்சை செய்யும் முன்னே என்
மதிப்பெண்களை குறித்துவிட்டான் போலும்

ஆயினும் பெண்ணே!!!!!

உன் சம்மதம் அக்காலனையும்
விதியையும் வென்றுவிடும்
தவிக்கின்றேன் சொல்லிவிடு
உன் சம்மதம்................

கொடுத்துவிட்டார்கள்

பூவான உன்னை
தேனான என்னிடம்
தரச்சொன்னேன்

ஆனால்!!!!

உன் பெற்றொர்கள்
உன்னை பெற்றோல்
ஊற்றி தீயிடம்
கொடுத்துவிட்டனர்


என்செய்வேன் என் சகியே????

Friday 31 August 2007

இதுதான் வாழ்க்கையா????

நான் வாழ எண்ணிப் பிறந்தேன்
உன் சாவை எண்ணி மடிந்தேன்
இதுதான் வாழ்க்கையா????

காவேரி பிரச்சனையின் தீர்வு

அன்பே உனைபிரிவதை எண்ணி
நான் சிந்திய கண்ணீர் போதுமடா
இந்த காவேரிப்பிரச்சனையை தீர்க்க.......

Monday 27 August 2007

(அ)யோக்கியன்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
அயோக்கியனும் அல்ல
உன் இன்பத்திற்காக என் காதலை
விடும்
யோக்கியனும் அல்ல
அன்றும் இன்றும் என்றும்
நான் உன் காதலன்....

நானும் கடவுள் தான்

உலகம் சொன்னது!
இறைவன் என்பவன் தன்னை
மறந்து பிறரை மகிழ்விப்பவன்

என் இதயம் சொன்னது!
அவ்வகையில் நீயும் இறைவன் என்
சிந்தித்தேன்.....இதயம் சொல்வதும் சரி

புரியவில்லையா?
சிந்தியுங்கள் நானும் என் சோகம் மறந்து
பிறரை மகிழ்விக்கின்றேன்.....

Friday 24 August 2007

என் மரணம்

சுடர் விட்டிருந்ததடி என் வாழ்வு
சுழற்றிவிட்டாயே நீ வந்து

ஓடிய மாதங்களில் ஓடியதே உன் காதல் - ஆனால்
ஓடிய மாதங்களில் கூடியதடி என் காதால்

புழு போல் துடிக்கிறதடி என் இதயம் - அதை
புழுங்கித்தள்ளுதடி என் இதழ்கள் - அதை
மறைக்கத்துடிக்கிறதடி என் மரணம்

ஆனால்....
மறைந்துபோவதில்லை காதல் என்றும்........

Thursday 23 August 2007

காதல் தீ

அன்பே!!!!
ஆபத்தென நீ அழைத்தபோது பத்தியது
உன் வீட்டுத்தீயல்ல என்
காதல் தீ

என் செய்வேன் நான்

மணவறையில் இருக்கும் போதும்...
என் மனம் உன்னை தானடா எண்ணுகின்றது...
பிணவறை செல்ல அஞ்சி... மணவறை வந்துவிட்டாயென
என் மனம் எனை கேலி செய்கின்றதடா என் செய்வேன்...

உன் சுவாசக்காற்றில் கலந்த என் மூச்சு கூட என்னை
ஏழனமாய் சிரிக்கின்றது என் செய்வேன்....
உன் நினைவுகளில் ஊஞ்சல் ஆடும் என் இதயத்தை.....
எவனோ கட்டிய தாலி வருடிய பின்பும்....
உன் நினைவுகள் எனை விட்டு கலயவில்லையே

என் செய்வேன் என் உயிரே...

Wednesday 22 August 2007

உனக்காகத்தான்

அன்பே...

நீ கேட்டதும் தந்த என் இதயத்தை தயவு செய்து
திருப்பிக்கொடுத்துவிடு...
ஏனெனில் எம் இதயம் இணையுமெனில்
உன் இதயம் கிழியுமாம்....

கிழிக்கும் ஊசியாக நான் இருக்க மாட்டேன்
தைக்கும் ஊசியென உன்னிடம் காட்டிக்கொள்ளவும் மாட்டேன்
ஆனால் அன்பே..... உன் முன்
துரோகியாக என்னால் காட்சியழிக்க முடியும்
என் செய்வேன் உனக்கு வலிக்கத்தான் செய்யும்
ஆனாலும் அவ்வலி நிரந்தரம் அல்ல....
அது வலியுமல்ல... ஆமாம் மருந்து...
என் உயிரே நீ எனை மறக்க நான் உனக்களித்த மருந்து
நான் கொடுத்த மருந்து கசக்கத்தான் செய்யும் இருப்பினும்
என்னுயிரே பொருத்துக்கொள்... எல்லாம் உன் நன்மைக்கே.....

இப்படிக்கு...
உன் வலி தாங்கா துரோகி....

முட்டாள்

கேட்டுத்தருவது தான் பாணம்
கேட்காது தருவது தான் பாசம்

ஆனால்!!!!!

இவ்வுலகில் கேட்டுத்தரும் பாணமே
கிடைப்பதில்லை

ஆகையால்.....

கேட்காதுதரும் பாசத்தை
தேடுபவ்ர்கள் முட்டாள்கள்

மானிடரே நீங்களும் முட்டாளாகாதீர்கள்.......

Tuesday 21 August 2007

நண்பா!!!

சிரித்திடுவார் பலர் உணைப்பார்த்து
வெறுத்திடுவாய் நீ அதைப்பார்த்து
உனக்கோ உடலில் ஊனம்
பலருக்கோ மனதில் ஊனம்


பாயமுடியாதென வருந்துகின்றாய் நீ
பாய்வதனாள் வருத்துகின்றார் சிலர்
எனவே சொல்கின்றேன் வருந்தாதே.....

நீயோ சிறந்தவன்
அவரோ சிதைப்பவர்

ஆகையால் சொல்லிவற்றை நீ அவர்க்கு
தானே நிறுத்திடுவர் நெகிழ்ந்து இவற்றை....

தேவையில்லை

இறந்தபின் நரகம் அனுபவிக்கத்தேவையில்லை
அவற்றை அனுபவிக்கின்றோம் இப்போதே
வாழ்க்கையில் அழுவதற்க்கு
தேவையில்லை
அழுது முடித்துவிட்டோம் இம்மண்ணை
அடையும் போது...

பிறக்கமுடிந்த எம்மால்!!!

பிறந்துதான் பார்ப்போம் என் பிறந்துவிட்டோம்
வாழ்ந்துதான் பார்ப்போம் எனும் நோக்கமில்லை
அழுதுதான் பார்ப்போம் என அழுதுவிட்டோம்
துடைத்துதான் பார்க்க எவருமில்லை

சிரித்துத்தான் பார்ப்போம் என் ஆசை கொண்டோம்
அழத்தெரிந்ததால் சிரிக்கமுடியவில்லை
இறந்துதான் பார்ப்போம் என் ஆசை கொண்டோம்
நரகத்தை நீங்க விரைவில் அனுமதி இல்லை

Monday 20 August 2007

அறியா மானிடரே

நட்பிற்க்கும், காதலிற்கும் வேறுபாடு
அறியாத மானிடரே கேளீர்
நட்பு என்பது இரு மனங்களின் சேர்க்கை
காதல் என்பது இரு உயிர்களின் சேர்க்கை

பிரிந்த நட்பு பல பசுமையான உணர்வுகள் சொல்லும்
பிரிந்த காதல் பலரை மடித்துச்செல்லும்
நட்பின் வழியில் காதல்வரின் அது போலி
காதலின் வழியில் நட்புவரின் அது விதி

காத்திருந்தேன்

ஆடியில் உனைப்பார்த்து
மாடியில் காத்திருந்தேன்
மாடியில் நீ வராததால்
மடித்துவிட்டேன்........ என் மனதை
மட்டும் அல்ல என் உயிரையும்

ஆனால்!!!!!!!!!

மடிந்தது என் மனம் மட்டுமல்ல - உன்
மனதும் தான் எனேனில் உன்
மனம் என்னிடம்

ஆசை கொண்டாய்

நான் உன்மேல் ஆசை கொண்டேன்
நீ என் பணம்மேல் ஆசை கொண்டாய்

நான் உன் மனம் என்னும் விட்டின்மேல்
ஆசை கொண்டேன்
நீ என் பணமாளிகைமேல்
ஆசை கொண்டாய்

ஆனால் இன்று.....

நான் இவற்றை இழத்து விட்டேன்
காரணம்
உன் ஆசையடி.................

நரகம்

நரகத்தை அனுபவிக்க ஆவலாய் உள்ளதா
இதயத்தில் இடம்பிடித்தவரை - ஒரே
ஒருமுரை பிரிந்துபார் அப்போது புரியும்
அந்த நிலைதான் நரகம்

சொல்லிவிடு

துடிக்கின்றேன் சொல்லிவிடு
துடிப்பதேனோ சொல்லிவிடு

வலிக்கிறது சொல்லிவிடு
வலிப்பதேனோ சொல்லிவிடு

நடிக்கின்றாய் சொல்லிவிடு
நடிப்பதேனோ சொல்லிவிடு

நொடிக்கிடனே சொல்லிவிடு
நெறிசல் ஏனோ சொல்லிவிடு

தடுப்பதென்ன சொல்லிவிடு
தடுப்பவனை சொல்லிவிடு

பிடிப்பதென்ன சொல்லிவிடு
பிடிப்பவனை சொல்லிவிடு

நினைப்பதனை சொல்லிவிடு
நினைப்பவனை சொல்லிவிடு

சொல்லிவிட்டேன் நான் இவற்றை
சொல்லிவிடு நீ அவற்றை.................

படையெடுத்து வாருங்கள்

பாசக்கயிற்றை வீசி பாசங்களை அறுக்கும் எமனும்
குண்டுகளை வீசி துண்டுகள் ஆக்கும் இவரும்
விசங்களை கக்கி விசமாக அழிக்கும் பாம்பும்
வஞ்சத்தை காட்டி விசமத்தை புறர்க்கழிக்கும் இவரும்

ஒன்றுதான்......... ஆகையால்!!!!!!!!!!!!!!

தாருமாராய் ஆடி தமிழ் தரணியை அழித்து
பாசத்தையும் ஒழித்த
பாதகத்தை விதைத்த
இவ் மதம்பிடித்தவரை அழிக்க
படையெடுத்து வாரீர் பதட்டமென்ன தயக்கமென்ன

தவறிய எம் தாயகத்தை படையெடுத்து மீட்போம் என்
கரம்கோத்து வாருங்கள் கலத்தினிலே இறங்கிடுவோம்...............

Sunday 17 June 2007

பொய்மை

முதன் முதலில் உனை நான்
பார்த்தபோது கவர்ந்தது உன்
அழகல்ல உன் மென்மை

ஆனால்!!!!

முதன் முதலில் நீ எனை
பார்த்தபோது கவர்ந்தது என்
மனம் அல்ல என் பணம்

பணம் பத்தும் செய்யுமென
அறிந்துள்ளேன் ஆனால் நீ
பணமே பத்தும் என்கிறாயே!!!!!