Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Friday, 21 August 2009

ஈழம்


ஈழத்து மண்ணிலே தான் வாழ்வேன் என்றவரெல்லாம்
ஈழத்துடனே சென்றுவிட்டனர்போலும்
தவறிய தாயகம் என்பதா
தவத்திய தாயகம் என்பதா…


ஈழத்து சிறுவர்கள் எல்லாம் எங்கே சென்றுவிட்டனர்
ஈழத்து பிணக்குழியில் பள்ளிப்பைகளுடன் உக்கியபடி…
தவறிய தாயகம் என்பதா
தவத்திய தாயகம் என்பதா…


ஈழத்து இளைஞரெள்ளாம் இங்கணம் கானோமே
ஈழத்து முகாமில் பணயக்கைதிகளாய்
தவறிய தாயகம் என்பதா
தவத்திய தாயகம் என்பதா…


தவறிய எம் தாயகத்தை எதைக்கொடுத்து மீட்பேன்…

Thursday, 12 June 2008

உயிர்ப்பு

கண்ணில் மணிபோல
நெஞ்சில் உனைவைத்து
உள்ளம் தனை எரித்து வாடிய
பூ இது
போதையேனும் நீறூற்றி மீண்டும்
உயிர்த்தது......

Saturday, 15 March 2008

எம் உறவு தான் என்ன?

நீ எனக்காக தினம் உயிர் எடுத்தாயே
நீ என்ன எந்தன் தாயாரா?

நீ எனக்கு திகைகள் தொடுத்தாயே
நீ என்ன எந்தன் தந்தையாரா?

நீ நான் மடிய உன் உயிர் மடித்தாயே
நீ என்ன எந்தன் தாரமா?

நீ என்னால் பூத்தாயே
நீ என்ன எந்தன் மழலையா?

நீ ஏன் வருகைக்காக காத்திருப்பதால்
நீ என்ன எந்தன் பக்தையா?

நீ என் பெயரை சூரியகாந்தி என சூடியதால்
நீ என்ன எந்தன் பரம்மரை வாரிசா?

பூவே நீ என்ன எந்தன் நிலழா????

Monday, 29 October 2007

உண்மை

நிலவே நீ இம்மக்களை சுழல்கின்றாய்
இவர்களோ பிறரை சுழற்றுகின்றார்கள்
உன் உடலில் சிறுகிடங்குகள்
இவர்கள் மனதில் புதைகிடங்குகள்

அருகில் நீ கறுப்பு
இவர்கள் மனதே கறுப்பு
நீ தருவது நிலாவெளிச்சம்
இவர்கள் தருவது வெடிவெளிச்சம்

உனக்கு உரித்து அழகு
இவர்க்கு உரித்து அழிவு

Tuesday, 9 October 2007

அன்றும் இன்றும்

அன்று!!!

உனக்கு வெள்ளி எனக்கோ வில்லி
உனக்கு விடுதலை எனக்கோ அறுதலை

மறுநாள்
காலை!!!!

நீ தூக்கிக்கட்டுவாய் தாலி
நான் தூக்கை கட்டுவேன் நாடி - அவள்
ஊட்டி விடுவாள் பால் உனக்கு - சிலர்
ஊற்றி விடுவார் பால் எனக்கு

மாலை!!!

உன் வீட்டுஜோதிக்கு ஏற்றுவாள் அவள் தீபம்
என் சோதிக்கும் ஏற்றுவார் சிலர் தீ

இன்று!!!!

படித்து முடிப்பாய் - என் இவ் வரலாற்றை
பார்த்து ரசிப்பேன் நான் இங்கு
இங்கு என்பது
சொர்க்கமா????
நரகமா???
அவன் கையில்
சென்றுவருகிறேன் என் உயிர் நண்பா!!!
என்றும் உன்..................

Wednesday, 26 September 2007

சாமாதானம்

கல்லெடுத்து சிலைவடித்த கலைஞனும்
சொல்லெடுத்து கவிகொடுத்த கவிஞனும்
உருவாக்கிய சமாதானம்
இன்று............
ஜடப்பொருளாய் உள்ளது
மீண்டும் உயிர் கொடிக்க வேண்டும்
உதவிக்கரம் தருவீர்களா மனிதர்களே?

Monday, 10 September 2007

மாமிமார்கள்

வீட்டுக்கு விளக்கேற்ற
மகாலஷ்மி வந்தாச்சு என்பார்கள்
எங்களுக்குத்தான் தெரியும் சோற்றுக்கு
அடுப்பேற்றப்போகிறவர் நாங்களென்று
எங்களை மட்டுமா மாட்டைக்கூடத்தான் மகாலக்ஷ்மி
என்கின்றார்கள்
கறக்கத்தான் நினைக்கிறார்கள் பாவம்
மன்னித்துவிடுங்கள் அவர்கள் மாமிமார்கள்.......

Friday, 7 September 2007

என் வாழ்வில்!!!!!!!!!!!

இன்பம் கிடைக்குமா என் வாழ்வில்
அன்பும் கிடைக்குமா என் வாழ்வில்
துன்மம் வேண்டுமா என் வாழ்வில்
நண்பன் வேண்டுமா என் வாழ்வில்

இன்பம் உள்ளதோ என் வாழ்வில்
அன்பும் உள்ளதோ என் வாழ்வில்
அன்பு உள்ளதா இவ்வுலகில்
கிடைக்குமா எனக்கு பங்கதனில்........

Wednesday, 5 September 2007

கொடுத்துவிட்டார்கள்

பூவான உன்னை
தேனான என்னிடம்
தரச்சொன்னேன்

ஆனால்!!!!

உன் பெற்றொர்கள்
உன்னை பெற்றோல்
ஊற்றி தீயிடம்
கொடுத்துவிட்டனர்


என்செய்வேன் என் சகியே????

Monday, 27 August 2007

நானும் கடவுள் தான்

உலகம் சொன்னது!
இறைவன் என்பவன் தன்னை
மறந்து பிறரை மகிழ்விப்பவன்

என் இதயம் சொன்னது!
அவ்வகையில் நீயும் இறைவன் என்
சிந்தித்தேன்.....இதயம் சொல்வதும் சரி

புரியவில்லையா?
சிந்தியுங்கள் நானும் என் சோகம் மறந்து
பிறரை மகிழ்விக்கின்றேன்.....

Wednesday, 22 August 2007

முட்டாள்

கேட்டுத்தருவது தான் பாணம்
கேட்காது தருவது தான் பாசம்

ஆனால்!!!!!

இவ்வுலகில் கேட்டுத்தரும் பாணமே
கிடைப்பதில்லை

ஆகையால்.....

கேட்காதுதரும் பாசத்தை
தேடுபவ்ர்கள் முட்டாள்கள்

மானிடரே நீங்களும் முட்டாளாகாதீர்கள்.......

Tuesday, 21 August 2007

நண்பா!!!

சிரித்திடுவார் பலர் உணைப்பார்த்து
வெறுத்திடுவாய் நீ அதைப்பார்த்து
உனக்கோ உடலில் ஊனம்
பலருக்கோ மனதில் ஊனம்


பாயமுடியாதென வருந்துகின்றாய் நீ
பாய்வதனாள் வருத்துகின்றார் சிலர்
எனவே சொல்கின்றேன் வருந்தாதே.....

நீயோ சிறந்தவன்
அவரோ சிதைப்பவர்

ஆகையால் சொல்லிவற்றை நீ அவர்க்கு
தானே நிறுத்திடுவர் நெகிழ்ந்து இவற்றை....

தேவையில்லை

இறந்தபின் நரகம் அனுபவிக்கத்தேவையில்லை
அவற்றை அனுபவிக்கின்றோம் இப்போதே
வாழ்க்கையில் அழுவதற்க்கு
தேவையில்லை
அழுது முடித்துவிட்டோம் இம்மண்ணை
அடையும் போது...

பிறக்கமுடிந்த எம்மால்!!!

பிறந்துதான் பார்ப்போம் என் பிறந்துவிட்டோம்
வாழ்ந்துதான் பார்ப்போம் எனும் நோக்கமில்லை
அழுதுதான் பார்ப்போம் என அழுதுவிட்டோம்
துடைத்துதான் பார்க்க எவருமில்லை

சிரித்துத்தான் பார்ப்போம் என் ஆசை கொண்டோம்
அழத்தெரிந்ததால் சிரிக்கமுடியவில்லை
இறந்துதான் பார்ப்போம் என் ஆசை கொண்டோம்
நரகத்தை நீங்க விரைவில் அனுமதி இல்லை

Sunday, 17 June 2007

பொய்மை

முதன் முதலில் உனை நான்
பார்த்தபோது கவர்ந்தது உன்
அழகல்ல உன் மென்மை

ஆனால்!!!!

முதன் முதலில் நீ எனை
பார்த்தபோது கவர்ந்தது என்
மனம் அல்ல என் பணம்

பணம் பத்தும் செய்யுமென
அறிந்துள்ளேன் ஆனால் நீ
பணமே பத்தும் என்கிறாயே!!!!!