Monday, 28 July 2008

மணக்கோலம்

அன்பே!!!!
மணக்கோலம் புகக்கேட்டேன் - நீ
மணந்ததோ வேறொருவன் ஆனால்
இன்றென்முன் விதவைக்கோலம் பூண்டதேனோ
சொல்லடி என் காதலி?????

Wednesday, 2 July 2008

யுகங்கள் வேண்டும்

நீ என்னைக்கவர
ஒரு நாள் போதும்
நான் உன்மேல் காதல் கொள்ள
ஒரு மணி நேரம் போதும்

ஆனால் அன்பே...

நான் உன்னை மறக்க மட்டும்
பல யுகங்கள் வேண்டும்

Wednesday, 18 June 2008

உன்னை திருப்பிக்கொடுக்காது....

லச்சக்கணக்கான வார்த்தைகளும் உன்னை என்னிடம்
திருப்பிக்கொடுக்க மாட்டா...
ஏனெனில் நான் அதை கையண்டு பார்த்துவிட்டேன்


என் லச்சக்கணக்கான கண்ணீர்த்துளியும் உன்னை என்னிடம்
திருப்பிக்கொடுக்க மாட்டா.
ஏனெனில் நான் அவற்றையும் சிந்திப்பார்த்துவிட்டேன்.....

Friday, 13 June 2008

மத்தியில் நீ

இல்லறத்தை மண்ணறமாக்கும்
பெண்கள் மத்தியில் - நீ என்
ம்ண்ணறத்தை இல்லறமாக்கிவிட்டு - நீ மட்டும்
மண்ணுக்குள் புதைந்ததேனோ??????????????

Thursday, 12 June 2008

உயிர்ப்பு

கண்ணில் மணிபோல
நெஞ்சில் உனைவைத்து
உள்ளம் தனை எரித்து வாடிய
பூ இது
போதையேனும் நீறூற்றி மீண்டும்
உயிர்த்தது......

Wednesday, 11 June 2008

வாழ்க்கை பயணம்

இறைவன் உன் வாழ்க்கை பயணத்தில்
தினம் ஒரு நாளை செர்ப்பது...
உனக்கென இல்லை
அந்நாளில் நீ பிறர்க்கென
உபயோகிக்கப் படுகின்றாய்....

Wednesday, 21 May 2008

இருப்பாயா என் நண்பா....

தனிமையில் நீ கவிஞனாய் இரு
கட்டளைகளிள் அரசனாய் இரு
வேலையில் விஞ்ஞானியாய் இரு
இறப்பினில் வரலாறாய் இரு

நீ இறக்கும் அக்கணம் வரை
என் நண்பனாய் இரு...

இழக்கின்றாய்...

என்று நீ உன் பணத்தை இழக்கின்றாயோ
அன்று நீ உண்மையில் எதையும் இழக்கவில்லை

என்று உன் உடல் நலம் குன்றப்படுகின்றதோ
அன்று நீ எதையோ இழக்கின்றாய்

இருப்பினும் நண்பா....

என்று நீ உன் நன்னடத்தையை
அன்று நீ எல்லாவற்றையும் இழக்கின்றாய்.....

Sunday, 11 May 2008

பூவே

பூவே உன்னிடம் போட்டியிடவந்துள்ளேன்
காரணமோ பல...........

ஆமாம்... காத்திருந்த பூசாரி நான் இருக்க
நேற்று பூத்த பூ நீ சிவனடி சேர்ந்துவிட்டாய்

காத்திருந்த காதலன் நான் இருக்க
நேற்று பூத்த பூ நீ காதலி கூந்தல் சேர்ந்துவிட்டாய்

இப்படிக்காரணங்கள் எத்தனையோ
ஆகினும் பூவே சிறந்தவளும் நீ தான்
வென்றதும் நீ தான் காரணம்

அவளுக்கு நீ சூடும் பூ
நானோ புல்
அறுகம் புல்லெனில் மகிழ்வேன்
ஆனால் நானோ வெரும் புல் என்றுவிட்டாள்.....

Friday, 28 March 2008

சொன்னார்கள்… முடியவில்லை

உன்னை மறந்து விடு என்றார்கள்
நானோ.. மறுத்தேன்…
மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்கள்
நானும்
மறக்க வேண்டும் என்று தான்
நினைத்துக் கொண்டேன் ….
இன்று வரை
உன்னை
மறக்க வேண்டும் என்பதற்காகவே
நினைத்துக்கொண்டிருக்கின்றேன் !!!!

ஆயுள் கைதி ஆகின்றேன்

நான் ஆயுள் கைதி
ஆகின்றேன் !!!!!!!!!
உன் மனதில்
என்னை என்றும்
சிறை வைப்பாய் என்றால் !!!!!

Monday, 24 March 2008

பண்புள்ள பெண்ணே

பண்புள்ள பெண்ணே உன்மேல் அன்புள்ள
காதலன் சொல்கின்றேன் வம்புகள் செய்யாது
சொல்லிவிடு உன் காதலை என்னிடம்
சொல்லாமல் வாட்டாதே மடிந்திடுவேன் நானே!!!!!!

பாவி

உருகா கல்லெனும் எந்தன் மனது
உருகிய காரணமும் நீயே
உருகிய என் மனதை
உருக்கிய பாவியும் நீயே.....

வாழ்த்துகிறேன் நான்

இன்றோடு நீ இவ்வுலகம் கண்டு 20 ஆண்டுகள் ஆகின்றன
இருப்பினும் உன்னை இவ்வுலகம் கண்டதில்லை

ஆகையால்.......


வாழ்த்துகின்றேன் இன் நல் நாளில்
உனை இவ்வுலகம் காண சிறப்பாயென
வாழ்த்திபவள் சிறியவலாயினும் வாழ்த்து பெரியதே....

நினைக்கவில்லை

ஆணையிட்டுச்சொல்கின்றேன்
நான் உன்னை நினைக்கவில்லை
ம்ம்ம்ம்…….
உன்னை மறந்தால் தானே….
நினைப்பதற்கு….

என்னை மறந்துவிடுகின்றேன்

உன்னையே எப்பொழுதும் – என்னுள்
நின்னைத்துக்கொண்டிருப்பதினால் தான்
சில சமயம்
நான் என்னையே ……
மறந்துவிடுகின்றேன் !!!!

Thursday, 20 March 2008

ஆசை

ஆடைகொண்டு அங்கம் மறைத்த
அவளால்
ஆசை கொண்டு என்னை மணக்க
முடியவில்லை....

Saturday, 15 March 2008

படைத்தது

இறைவன் மலரென பெண்களை படைத்தது
ஏனேனில்........
பேசா மலர்கள் வாடுவது போல
பேசும் மலர்கள் வாடத்தானோ!!!!!!!

எம் உறவு தான் என்ன?

நீ எனக்காக தினம் உயிர் எடுத்தாயே
நீ என்ன எந்தன் தாயாரா?

நீ எனக்கு திகைகள் தொடுத்தாயே
நீ என்ன எந்தன் தந்தையாரா?

நீ நான் மடிய உன் உயிர் மடித்தாயே
நீ என்ன எந்தன் தாரமா?

நீ என்னால் பூத்தாயே
நீ என்ன எந்தன் மழலையா?

நீ ஏன் வருகைக்காக காத்திருப்பதால்
நீ என்ன எந்தன் பக்தையா?

நீ என் பெயரை சூரியகாந்தி என சூடியதால்
நீ என்ன எந்தன் பரம்மரை வாரிசா?

பூவே நீ என்ன எந்தன் நிலழா????

Wednesday, 6 February 2008

என்னால் முடியவில்லை

அன்பே...


ஒருவார்த்தை சொல்லி உனைவிட்டுப்பிரிந்து விட்டேன
பல வார்த்தைகள் என்னுள் புதைந்ததை யாரறிவார்.....


எங்கிருந்தாலும் நீ நன்றே வாழ்க...
ஆனால் தயவுசெய்து என் முன் வந்திடாதே..
ஏனெனில் புதைந்திருந்த வார்த்தைகள் எல்லாம்
எட்டிப்பாக்கின்றன உனைக்கண்டவுடன்....

நீ அவள் கரம் பிடிப்பதை காணமுடியாமல்.....
வார்த்தைகள் பாதை மாறி என்
கண் வழியே வெளியேருகின்றன...

வார்த்தைகள் முட்டி இதயத்தை உதைக்கின்றது.....
இதயமோ முட்டி என் கண்களில் அலை பாய்கின்றது...
அலைகள் வழிகின்றன அணைகட்ட ஆளில்லை.....

அன்பே... விதியை எண்ணி உன்னை நழுவவிட்டுவிட்டேனோ??????
அய்யோ.. என்னால் முடியவில்லையடா...

உனைவிட்டு என்னைப்பிரித்த விதி
எனை இம் மண்ணைவிட்டு பிரியவும் விடவில்லை...
ம்ம்ம்ம்ம்ம்.... எனை ஈன்றவள் சுரக்கின்றாள் கண்ணில் அலையாய்..
இருப்பினும் என் அன்பே

அவன் என் கரம் பிடிக்கும் முன் அழித்திடுவேன் என்னை...
உன் நினைவுகளை சுமந்த என்னால்
அவன் உயிரை சுமக்க முயாது....
என்னால் முடியவில்லை என் செய்வேன்.....