Wednesday 23 September 2009

பக்தர் மனம் குடிகொண்டாயம்மா...


ஒன்பது ராத்திரிகள் உனதேயம்மா
அதில் மும்மூன்று வேடத்தில் நீயேயம்மா

வீரநாயகி துர்க்கையம்மா
செல்வபாமினி லக்க்ஷ்மியம்மா
கல்விப்பேறூற்று சரஷ்வதியம்மா
நீயே எங்கள் காமாட்சியம்மா....

துர்க்கை வேடத்தில் வந்தாயம்மா
துஷ்டரை அழித்திடவே வந்தாயம்மா....

திருமகள் வேடத்தில் வந்தாயம்மா
திருவருட்செல்வம் பெருகிடவே வந்தாயம்மா....

கலைவாணி வேடத்தில வந்தாயம்மா
கலைகள் பல தந்திடவே வந்தாயம்மா....

வந்தாயம்மா வந்தருள் தந்தாயம்மா
கொண்டாயம்மா பக்தர் மனம் குடிகொண்டாயம்மா....

எங்கள் காமட்சி அம்மா

அன்பு மழை நீ எங்கள் காமாட்சியம்மா
அல்லல்கள் நீக்கிடுவாய் நீயே அம்மா....

காவல் வேலி நீ எங்கள் காமாட்சியம்மா
காத்திடுவாய் உயிர்தனை நீயே அம்மா....

ஜோதி ஒளியடி நீ எங்கள் காமாட்சியம்மா
சோதனை வேதனை தீர்த்திடுவாய் நீயே அம்மா....

வாச மலர் நீ எங்கள் காமாட்சியம்மா
வஞ்சனையை ஒழித்திடுவாய் நீயே அம்மா....

வானும் மண்ணும் நீ எங்கள் காமாட்சியம்மா
வையம் தனை வாழவைத்திடுவாய் நீயே அம்மா....

எங்கள் காமாட்சி அம்மா சரணம்


உனை இப்புவனிதனில் அழைத்திட பூஜைகள் செய்தேன்
நீயோ அசையாத்திடத்துடனே வரவும் மறுத்தாய்
உனை தீபங்கள் காட்டியே மீண்டும் அழைத்தேன்
நீயோ பார்வையினை கட்டிவிட்டு மீண்டும் மறுத்தாய்
உனை பட்டினாள் அலங்கரித்து பொட்டும் வைத்து சேவைகள் பல செய்தேன்
நீயோ பட்டதனை பற்றவும் மறுத்துவிட்டாய்...
உன்னை சுட்டதென்ன பட்டதென்ன சொல்லிடு என்றேன்
நீயோ “என்” என்பதை ஒழித்திடு என்றே சொன்னாய்
உன்னை இப்பாவி நாம் புரிந்த்துட்டோம் என்றே சொல்ல
சட்டென்று காட்சிதர நீயும் முன் வந்தாய்....

உன்னால் “நான்“ அல்ல “நாம்“ எனும் மந்திரம் அதை நாம் அறிந்தோம்
இதைப்பரப்பிடுவோம் இவ்வுலகில் உந்தன் முன்னாள்
நம்பிடுவாய் வார்த்தைகளை என்றே சொல்ல
நம்பி எமக்கு அருளியவளே எங்கள் காமாட்சியம்மா.....