மாற்றங்கள் மாறுவதில்லை
மாறியவன் திரும்புவதில்லை
மாற்றங்கள் மறைந்துவிட்டால்
மானிட வாழ்விற்கு மது இல்லை...
எனக்குள் புதைந்து இருக்கும் தழிழை அழியாது மேலும் வளர்க்க எனது ஊன்றுகோலாக இவ் கவிதைத்துளிகளை செதுக்குகின்றேன்.... தழிழா இது உனக்கும் பயன் படுமெனில் மேலும் பெருமை கொள்வேன்.....
ஒன்பது ராத்திரிகள் உனதேயம்மா
அதில் மும்மூன்று வேடத்தில் நீயேயம்மா
வீரநாயகி துர்க்கையம்மா
செல்வபாமினி லக்க்ஷ்மியம்மா
கல்விப்பேறூற்று சரஷ்வதியம்மா
நீயே எங்கள் காமாட்சியம்மா....
துர்க்கை வேடத்தில் வந்தாயம்மா
துஷ்டரை அழித்திடவே வந்தாயம்மா....
திருமகள் வேடத்தில் வந்தாயம்மா
திருவருட்செல்வம் பெருகிடவே வந்தாயம்மா....
கலைவாணி வேடத்தில வந்தாயம்மா
கலைகள் பல தந்திடவே வந்தாயம்மா....
வந்தாயம்மா வந்தருள் தந்தாயம்மா
கொண்டாயம்மா பக்தர் மனம் குடிகொண்டாயம்மா....
உனை இப்புவனிதனில் அழைத்திட பூஜைகள் செய்தேன்
நீயோ அசையாத்திடத்துடனே வரவும் மறுத்தாய்
உனை தீபங்கள் காட்டியே மீண்டும் அழைத்தேன்
நீயோ பார்வையினை கட்டிவிட்டு மீண்டும் மறுத்தாய்
உனை பட்டினாள் அலங்கரித்து பொட்டும் வைத்து சேவைகள் பல செய்தேன்
நீயோ பட்டதனை பற்றவும் மறுத்துவிட்டாய்...
உன்னை சுட்டதென்ன பட்டதென்ன சொல்லிடு என்றேன்
நீயோ “என்” என்பதை ஒழித்திடு என்றே சொன்னாய்
உன்னை இப்பாவி நாம் புரிந்த்துட்டோம் என்றே சொல்ல
சட்டென்று காட்சிதர நீயும் முன் வந்தாய்....
உன்னால் “நான்“ அல்ல “நாம்“ எனும் மந்திரம் அதை நாம் அறிந்தோம்
இதைப்பரப்பிடுவோம் இவ்வுலகில் உந்தன் முன்னாள்
நம்பிடுவாய் வார்த்தைகளை என்றே சொல்ல
நம்பி எமக்கு அருளியவளே எங்கள் காமாட்சியம்மா.....
என் கண்களை மூடுகின்றேன் உன்னை சிறையடைத்தபடி
என் இதயம் திறக்கிறது உன் இதயத்துடிப்பில்....
உனக்கேன் இது புரியவில்லை
காதல் என்பது இவ்வுலகில் சொல்லிப்புறிவதில்லை
உனக்கோ அது சொன்னாலும் புரிவதில்லை
கடிகாரததில் நொடி முள்ளும் சுழல்கின்றது...
மணித்தியாலங்களும் நகர்கின்றன...
உன் கண்ணிமைக்கும் சம்மதத்திற்காக
என் இதயதுடிப்பை மட்டும் நிறுத்திவைக்கின்றேன் நான்...
உன் முரட்டுப்பிடிவாதமும் ஏனோ பிடிக்கின்றது
அதனால் தானோ என் இதயம் கிடந்து துடிக்கிறது...
உன் இதயத்துடிப்பை உள்வாங்க...
உன்னை என்னுள் ஒளித்துவிட்டேன்
ஆனால் என்னை உன் முன் ஒளிக்கமாட்டேன்...
ரகசியமாகவாவது என்னை காதலி அன்பே...
எம் காதலை உலகிற்கு அறிவிக்கமாட்டேன்
ஈழத்து மண்ணிலே தான் வாழ்வேன் என்றவரெல்லாம்
ஈழத்துடனே சென்றுவிட்டனர்போலும்
தவறிய தாயகம் என்பதா
தவத்திய தாயகம் என்பதா…
ஈழத்து சிறுவர்கள் எல்லாம் எங்கே சென்றுவிட்டனர்
ஈழத்து பிணக்குழியில் பள்ளிப்பைகளுடன் உக்கியபடி…
தவறிய தாயகம் என்பதா
தவத்திய தாயகம் என்பதா…
ஈழத்து இளைஞரெள்ளாம் இங்கணம் கானோமே
ஈழத்து முகாமில் பணயக்கைதிகளாய்
தவறிய தாயகம் என்பதா
தவத்திய தாயகம் என்பதா…
தவறிய எம் தாயகத்தை எதைக்கொடுத்து மீட்பேன்…