Wednesday, 23 September 2009

பக்தர் மனம் குடிகொண்டாயம்மா...


ஒன்பது ராத்திரிகள் உனதேயம்மா
அதில் மும்மூன்று வேடத்தில் நீயேயம்மா

வீரநாயகி துர்க்கையம்மா
செல்வபாமினி லக்க்ஷ்மியம்மா
கல்விப்பேறூற்று சரஷ்வதியம்மா
நீயே எங்கள் காமாட்சியம்மா....

துர்க்கை வேடத்தில் வந்தாயம்மா
துஷ்டரை அழித்திடவே வந்தாயம்மா....

திருமகள் வேடத்தில் வந்தாயம்மா
திருவருட்செல்வம் பெருகிடவே வந்தாயம்மா....

கலைவாணி வேடத்தில வந்தாயம்மா
கலைகள் பல தந்திடவே வந்தாயம்மா....

வந்தாயம்மா வந்தருள் தந்தாயம்மா
கொண்டாயம்மா பக்தர் மனம் குடிகொண்டாயம்மா....

எங்கள் காமட்சி அம்மா

அன்பு மழை நீ எங்கள் காமாட்சியம்மா
அல்லல்கள் நீக்கிடுவாய் நீயே அம்மா....

காவல் வேலி நீ எங்கள் காமாட்சியம்மா
காத்திடுவாய் உயிர்தனை நீயே அம்மா....

ஜோதி ஒளியடி நீ எங்கள் காமாட்சியம்மா
சோதனை வேதனை தீர்த்திடுவாய் நீயே அம்மா....

வாச மலர் நீ எங்கள் காமாட்சியம்மா
வஞ்சனையை ஒழித்திடுவாய் நீயே அம்மா....

வானும் மண்ணும் நீ எங்கள் காமாட்சியம்மா
வையம் தனை வாழவைத்திடுவாய் நீயே அம்மா....

எங்கள் காமாட்சி அம்மா சரணம்


உனை இப்புவனிதனில் அழைத்திட பூஜைகள் செய்தேன்
நீயோ அசையாத்திடத்துடனே வரவும் மறுத்தாய்
உனை தீபங்கள் காட்டியே மீண்டும் அழைத்தேன்
நீயோ பார்வையினை கட்டிவிட்டு மீண்டும் மறுத்தாய்
உனை பட்டினாள் அலங்கரித்து பொட்டும் வைத்து சேவைகள் பல செய்தேன்
நீயோ பட்டதனை பற்றவும் மறுத்துவிட்டாய்...
உன்னை சுட்டதென்ன பட்டதென்ன சொல்லிடு என்றேன்
நீயோ “என்” என்பதை ஒழித்திடு என்றே சொன்னாய்
உன்னை இப்பாவி நாம் புரிந்த்துட்டோம் என்றே சொல்ல
சட்டென்று காட்சிதர நீயும் முன் வந்தாய்....

உன்னால் “நான்“ அல்ல “நாம்“ எனும் மந்திரம் அதை நாம் அறிந்தோம்
இதைப்பரப்பிடுவோம் இவ்வுலகில் உந்தன் முன்னாள்
நம்பிடுவாய் வார்த்தைகளை என்றே சொல்ல
நம்பி எமக்கு அருளியவளே எங்கள் காமாட்சியம்மா.....

Wednesday, 2 September 2009

என் காதல்

என் கண்களை மூடுகின்றேன் உன்னை சிறையடைத்தபடி
என் இதயம் திறக்கிறது உன் இதயத்துடிப்பில்....


உனக்கேன் இது புரியவில்லை
காதல் என்பது இவ்வுலகில் சொல்லிப்புறிவதில்லை
உனக்கோ அது சொன்னாலும் புரிவதில்லை


கடிகாரததில் நொடி முள்ளும் சுழல்கின்றது...
மணித்தியாலங்களும் நகர்கின்றன...
உன் கண்ணிமைக்கும் சம்மதத்திற்காக
என் இதயதுடிப்பை மட்டும் நிறுத்திவைக்கின்றேன் நான்...


உன் முரட்டுப்பிடிவாதமும் ஏனோ பிடிக்கின்றது
அதனால் தானோ என் இதயம் கிடந்து துடிக்கிறது...
உன் இதயத்துடிப்பை உள்வாங்க...


உன்னை என்னுள் ஒளித்துவிட்டேன்
ஆனால் என்னை உன் முன் ஒளிக்கமாட்டேன்...
ரகசியமாகவாவது என்னை காதலி அன்பே...
எம் காதலை உலகிற்கு அறிவிக்கமாட்டேன்


நீ தந்த காதல் காயம்...என்னுள் என்றும் ஆறாமலே...
மாற்றிக்கொள் என்கின்றாய் மருந்திட்டுக்கொள்ளவும் மனதில்லை மாற்றங்கள் ஏதும் எனக்கில்லை மருந்திட்டும் என்னுள் மாற்றமில்லை

Friday, 21 August 2009

அரசன் அடிமையானான்

வெற்றிலை போட்ட வானத்தைப்பார்த்தேன்....
உன் கண்ணங்கள் சிவந்ததை அறிந்தேன்...

நீல வானில் நிலவைப்பார்த்தேன்...
நிலவின் ஒளியை குடித்த உன் முகத்தை அறிந்தேன்...

மழையூட்டும் மண்ணின் வாசத்தை சுவாசித்தேன்....
உன் கூந்தலின் இயற்கை நறுமணம் அறிந்தேன்...

சில்லென்ற காற்று எனை அண்டக்கண்டேன்
உன் கைகளை வருடிய அந்நிலை அறிந்தேன்...

பஞ்சுமிட்டாய் என் நாக்கில் கரைய
உன் உதடுகளில் கரைந்த இனிப்பினை அறிந்தேன்...

எனக்குள் அடிமையாக வந்து
என்னை அரசாலு என்அன்பே....

உனக்குள் அரசனாக வந்து
என்னை உனக்கு அடிமை ஆக்கிவிட்டேன் என்றோ...

ஈழம்


ஈழத்து மண்ணிலே தான் வாழ்வேன் என்றவரெல்லாம்
ஈழத்துடனே சென்றுவிட்டனர்போலும்
தவறிய தாயகம் என்பதா
தவத்திய தாயகம் என்பதா…


ஈழத்து சிறுவர்கள் எல்லாம் எங்கே சென்றுவிட்டனர்
ஈழத்து பிணக்குழியில் பள்ளிப்பைகளுடன் உக்கியபடி…
தவறிய தாயகம் என்பதா
தவத்திய தாயகம் என்பதா…


ஈழத்து இளைஞரெள்ளாம் இங்கணம் கானோமே
ஈழத்து முகாமில் பணயக்கைதிகளாய்
தவறிய தாயகம் என்பதா
தவத்திய தாயகம் என்பதா…


தவறிய எம் தாயகத்தை எதைக்கொடுத்து மீட்பேன்…

Monday, 17 August 2009

ஆசை

சூரியன் விடைபெறும் அந்நேரம்
அலைகள் கை தட்டி வழி அனுப்ப...
உன் கைகளை வருடிய படி என கைகள்

சூரியன் விடைபெறும் அந்நேரம்
ஆகாயம் நாணத்தில் சிவந்திட...
கன்னங்களை பழுக்க விட்டபடி உன் அருகில் என் நாணம்

சூரியன் விடைபெறும் அந்நேரம்
குரும்புத்தனத்துடன் நிலா காத்திருக்க...
சில்மிசம் செய்யும் உன் கண்கள்

சூரியன் விடைபெறும் அந்நேரம்
கரையை வருடிய நண்டுகளுடன்
போட்டியிட கரைதேடிய என் கால்கள்

சூரியன் விடைபெறும் அந்நேரம்
நீருக்குள் மூல்கிடும் தாமரை போல
உன் நெஞ்சினில் உதைந்திடும் என் முகம்....

உன் இதயம்

உன் கைகளை கட்டினேன் தீண்டாதே என
உன் கண்களால் என்னை கைப்பற்றினாய்
உன் கண்களை இருக்க மூடினேன் பாக்காதே என
என் சுவாசத்தை உள்விட்டு உன்னுள் செலுத்தினாய்
உன் இதயத்தை எட்டி
என் இதயத்தை மீட்டெடுத்தேன்
உன் இதயத்துடிப்பை அறவே நிருத்திவிட்டாய்...
என் செய்வேன் நான் இனி...

Friday, 14 August 2009

காதல்

வார்த்தைகள் மவுனமாக
இதயங்கள் மலர்ந்தன
இதயங்கள் துடிக்க மறக்க
கண்ணகள் மலர்ந்தன
கண்ணகள் இமைக்க மறக்க
வார்த்தைகள் மலர்ந்தன

Wednesday, 11 February 2009

கண்ணீர் அஞ்சலி - திரு. அம்பலவாணர் ஐயாத்துரை( This is for my uncle)

சிறகுகள் அடைக்கப்பட்ட சிட்டுக்குருவியாக எம் சொந்தமண்ணிலே வாழ்ந்தாலும்
நீ கட்டிய கூட்டினில் உன் ஜோடிக்குருவியுடன் உன் வாழ்க்கை இனிதே நகர்ந்தது...
பெற்றெடுத்தாய் ஐந்து முத்துக்களை...
உமக்கென ஐவர், ஐவரில் மூவர் உன் பால் மற்றவர் பெண்பால்...
மூவரில் இருவர் மட்டும் இன்று உன்பால் மற்றவர் அப்பால்...
காலங்களும் ஓடின... யுத்தங்களும் ஓடின நீயும் ஓடினாய் நாடோடி என
ஆனால்... உனைவிட்டு உன் நோய்கள் மட்டும் ஓடவில்லை...
உள்ளிருந்து அது குடைய பதட்டமோ உனை வதைக்க
நீ சிந்திய முத்துக்கள் இரண்டு கடல் தாண்டி வாழ்ந்திருக்க
தமிழீழ மண்ணிலே தலை சாய்க்கவே நான் வந்திடுவேன் என துணைவியிடம் வாக்களிக்க...
வாக்குமாற மாட்டாயென நம்பி உனை அனுப்ப
இன்று... நம்பிக்கை துரோகம் செய்ய எங்கனம் மனம் உகந்தாய்...
அன்று... கடல் தாண்டி ஆகாயமார்க்கமாய் உடலில் உயிர்தாங்கி எம்வழி வந்தாய்...
இன்று... கடல் தாண்டி ஆகாயமார்க்கமாய் உடலில் உயிர்விட்டு பறந்திட்டாய்...

லண்டன் மண்ணில் உன் வாழ்க்கை

நடையினில் நடுக்கமும் கண்களில் ஏக்கமும் தாங்கியபடி நீ வந்தாய்...
உறவுகள் கண்டாய் உல்லாசமாய் இருந்தாய்...
நாட்களும் ஓடின மாதங்களும் இரண்டு ஆகின...

மனைவி மக்களை எண்ணி உள்நெஞ்சில் நீ புலம்ப...
இரத்த அழுத்தம் உன்னுள்ளே அதிகரிக்க...
நாடி வழி குருதி சீறிட்டுப்பாய்ந்திட...
சிரசை வந்து சேர்ந்தது... மதியைத்தாக்கிச்சென்றது...
நொடிகளும் ஓடின நாட்களும் ஆகின

நாடிவழியே... குருதி பெருக்கெடுக்க தொடங்கின...
கண்வழியே அருகி கண்ணீரும் முட்டின...
கால்வழி கைவழி நரம்புகள் மரத்தன...
உன்வழி உறவுகள் கூக்குரல் எழுப்பின...

“அப்பா பாருங்கோ... அய்யோ என்னை பாருங்கோ...
பப்பா பாருங்கோ… பிள்ள என்னை பாருங்கோ...
அத்தார் பாருங்கோ... தம்பி என்னை பாருங்கோ...
அண்ண பாருங்கோ... கண்திறந்து என்னை பாருங்கோ...
குஞ்சையா பாருங்கோ... நிமிர்ந்து என்னை பாருங்கோ...
மாமா பாருங்கோ… ஒருக்கா என்னை பாருங்கோ...
அத்தமாமா பாருங்கோ... மூன்று பேரையும் பாருங்கோ…
அம்மப்பா பாருங்கோ… எங்களை கொஞ்சம் பாருங்கோ...
அப்பப்பா பாருங்கோ… தம்பி முருகன் அழுகிறான் பாருங்கோ…”

லண்டன் வந்தாய்... எம்மை பார்க்க என எண்ணி இருந்தோம்
ஆனால் மருத்துவமனை பார்க்க கங்கணம் கட்டி ஏன் வந்தாய்...

எதைக்கேட்டாலும் ஆறுமாதம் நிற்பேன் என்றாய்...
காலனவன் காத்திருக்கும் அறிகுறி அறியாயோ...
காலனிற்கு விண்ணப்பம் இட நீ நினைக்கலயோ...

படுக்கையில் நீ இருக்க வார்த்தைகளோ புதைந்திருக்க
கண்களில் ஏக்கத்துடன் நீ பார்த்த பார்வை வழி
வார்த்தைகள் பாதை மாறி உன் கண்வழியே வெளியேற
வார்த்தைகள் முட்டி இதையத்தை உதைத்திடவே
இதயமோ முட்டி உன் கண்களில் அலை பாய...
அலைகள் வழிகின்றது, அணைகட்ட அசைவில்லா உன் கைகள் என்செய்யும்...

தலை கோத கைதூக்க, கை அசையாதேயிருக்க
தலை தாழ்ந்து உனை மணந்த மகராசியையா நினைச்சிங்க...
பேரன் பேத்தி ஓடேக்க, கால் தவறி விழப்பாக்க
ஓடிப்போய் தாங்க... அசையா உங்க காலை என்ன சொல்லி திட்டினிங்க...
மூச்சுத்திணறேக்க என்ன அய்யா நினைச்சிங்க
முத்தமிட்டு வழி அனுப்ப சொந்தம் நாங்க உண்டெனவா நினைச்சிங்க...

காலப்பரீட்சை எழுதி விட்டு நீ காத்திருக்க...
காலனவன் தேடி உன்னிடம் வந்திருக்க
யுத்த களத்தில் நீ இறங்க
காலனவன் உனை வென்றுவிட்டான்... நீ உனை தோற்றுவிட்டாய்...

உறவுகள் கூச்சலிட... ஒப்பாரிகள் எதிரொலிக்க...
அய்யா உங்க காதுக்கு ஒரு ஒலியும் எட்டலயோ...
மகராசி அங்கிருக்கா அவவுக்கு நாங்க என்ன சொல்ல
சொல்லாம போயிட்டீங்களே... என்ன செய்ய நாங்க இங்க...


உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்